பொது செய்தி

தமிழ்நாடு

'தமிழகத்தில் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

Added : ஜன 13, 2021
Share
Advertisement
சென்னை:'தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காக, வரும், ௧௯ம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி., அறிவித்துஉள்ளார்.கடந்த ஆண்டு, மார்ச், 25 முதல், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசின் சிறப்பான செயல்பாட்டாலும், பொது மக்கள் ஒத்துழைப்பாலும், அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த,2020 டிசம்பர்,

சென்னை:'தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காக, வரும், ௧௯ம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி., அறிவித்துஉள்ளார்.

கடந்த ஆண்டு, மார்ச், 25 முதல், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசின் சிறப்பான செயல்பாட்டாலும், பொது மக்கள் ஒத்துழைப்பாலும், அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த,2020 டிசம்பர், 28ம் தேதி, கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை படியும், பொங்கல் விடுமுறைக்கு பின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காக, பள்ளிகளை திறப்பது குறித்து, 6ம் தேதி முதல், 8ம் தேதி வரை, பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, முதல்வர் வெளியிட்ட அறிக்கை:பள்ளிகளில் நடத்தப்பட்ட, கருத்து கேட்பு கூட்டங்களில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோர், பள்ளிகளை திறக்க இசைவு தெரிவித்து உள்ளதாக, 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளன.இதன் அடிப்படையிலும், கல்வி பயில்வதில், மாணவர்களின் வருங்கால நலனை கருத்தில் வைத்தும், 19ம் தேதி முதல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிகள் திறக்கப்படும் போது, ஒரு வகுப்பறையில், 25 மாணவர்களுக்கு மிகாமல் அமரவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படவும், அனுமதி அளிக்கப் படுகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படவும், அனுமதி அளிக்கப் படுகிறது.

அனைத்து மாணவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வசதியாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க, சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி, அரசு எடுத்து வரும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு, பெற்றோரும், ஆசிரியர்களும், மாணவர்களும், முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X