கோவை:சமீபத்தில் பெய்த மழைக்கு, சிங்காநல்லுார் உழவர் சந்தை வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது; காய்கறி விற்க முடியாததால், நுழைவாயிலில் அமர்ந்து, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கோவை, திருச்சி ரோட்டில், சிங்காநல்லுாரில் உழவர் சந்தை செயல்படுகிறது. சின்ன குயிலி, பெரிய குயிலி, ஓடக்கல்பாளையம், பாப்பம்பட்டி, வடுகபாளையம், வெள்ளலுார், போகம்பட்டி, வடவள்ளி, பட்டணம், பீடம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தினமும் காலை, 3:30 மணிக்கு சந்தை திறக்கப்படும்; 11:00 மணி வரை செயல்படும்.சில நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு, சந்தையின் மேற்குப்பகுதியில் இருந்து, மழை நீரோடு கழிவு நீர் கலந்து, உழவர் சந்தை வளாகத்துக்குள் புகுந்தது. அதனால், சேறும் சகதியுமாக மாறியது.விவசாயிகள் தரப்பில் பலமுறை முறையிட்டும், நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாததால், நுழைவாயில் முன் நேற்று தரையில் அமர்ந்து, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.விவசாயிகளிடம் போலீசார் பேச்சு நடத்தினர். சந்தை நிர்வாகம் தரப்பில், மாநகராட்சி துாய்மை பணியாளர்களை வரவழைத்து, சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் துாவினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE