கோவை:கீழ் கொறவன் கண்டி மலை கிராமத்தில், மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளிகள் குழுமம் சார்பில், பொங்கல் விழா நடந்தது.காரமடை வனச்சரகத்துக்குட்பட்டது, கீழ் கொறவன் கண்டி மலை கிராமம். இங்கு, மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளிகள் குழுமம் சார்பில், வனத்துறையினர் மற்றும் பழங்குடியினர் பங்கேற்ற பொங்கல் விழா நடந்தது.பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, பழங்குடியினரின் பாரம்பரிய நடனத்தை தொடர்ந்து, பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மாவட்ட வனத்துறை அதிகாரி வெங்கடேஷ், வனச்சரக அதிகாரி மனோகரன், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளிகளின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை, பள்ளி செயலாளர் மோகன்தாஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE