பொது செய்தி

தமிழ்நாடு

பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்பட்டது: நாளை மாலை 6:30-க்கு மகரஜோதி

Added : ஜன 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சபரிமலை:மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம் அடங்கிய பவனி பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது. நாளை மாலை 6:30 மணிக்கு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காட்சி தருகிறது.சபரிமலையில் நாளை மாலை மகர விளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது.பந்தளம் அரண்மனையில்
 பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்பட்டது: நாளை மாலை 6:30-க்கு மகரஜோதி

சபரிமலை:மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம் அடங்கிய பவனி பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது. நாளை மாலை 6:30 மணிக்கு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காட்சி தருகிறது.

சபரிமலையில் நாளை மாலை மகர விளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது.பந்தளம் அரண்மனையில் ஐயப்பன் வளர்ந்தார். சபரிமலை சென்ற பின்னர் ஐயப்பனைக்காண பந்தளம் மன்னர் ஆபரணங்களுடன் சென்றார். அதை நினைவு படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பந்தளம் மன்னர் பிரதிநிதியுடன் திருவாபரணபவனி சபரிமலை வருகிறது.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் பந்தளம் சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மதியம் 12:30 மணிக்கு பவனி புறப்படுவதற்கான சடங்குகள் தொடங்கின. ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டது.மதியம் 1:00 மணிக்கு சரணகோஷங்கள் முழங்க திருவாபரண பவனி புறப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகளால் போலீசார், தேவசம்போர்டு ஊழியர்கள் மட்டுமே பவனியில் வருகின்றனர்.மேலும் இந்த ஆண்டு பந்தளம் மன்னர் குடும்பத்தில் குழந்தை பிறந்துள்ளதால் ராஜபிரநிதியாக யாரும் பவனியில் வரவில்லை.முக்கிய திருவாபரண பெட்டியை குருசாமி கங்காதரன் சுமந்து வந்தார்.

மூன்று பெட்டிகள் வந்தன. 25 பேர் அடங்கிய குழுவினர் இந்த பெட்டிகளை சுமந்து வருவர். ஐரூர் புதியக்காவு தேவி கோயிலில் இந்த பவனி தங்கியது. இன்று ளாகா சத்திரத்தில் தங்கும் திருவாபரணம் நாளை மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி, 6:25க்கு சன்னிதானம் வந்து சேரும்.தீபாராதனை முடிந்ததும் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
13-ஜன-202106:54:43 IST Report Abuse
Muguntharajan மூணு தடவ ஈபிகாரனுக செட்டப் செஞ்ச லைட்ட போட்டு ஆஃப் பண்ணுவாங்கன்னு உண்மைய சொல்லுங்க. ஜோதி தெரியுதாம். எல்லாம் ஏமாற்று வேலை. அதுவும் ஆன்மீகத்தில். வெட்கக்கேடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X