மதுரை:அறநிலையத் துறை கூடுதல் கமிஷனராக, ரமண சரஸ்வதியை நியமித்த, தமிழக அரசின் உத்தரவிற்கு எதிரான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
அறநிலையத் துறையின் முன்னாள் உதவி கமிஷனர், மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த, ரமேஷ் மகாதேவ் தாக்கல் செய்த மனு:'இ - கவர்னன்ஸ்' துறை இணை இயக்குனராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரமண சரஸ்வதி, இடமாறுதல் அடிப்படையில், அறநிலையத் துறை கூடுதல் கமிஷனராக, டிச., 24ல் நியமிக்கப்பட்டார்.
அறநிலையத் துறை கமிஷனர் பதவிக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்கலாம்.அறநிலையத் துறை இணை கமிஷனராக பணிபுரிந்தால், அவரை பதவி உயர்வு அடிப்படையில், கூடுதல் கமிஷனராக நியமிக்க, அறநிலையத் துறை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்க இயலாது. ரமண சரஸ்வதியை, கூடுதல் கமிஷனராக நியமித்ததில் விதிமீறல் உள்ளது. நியமனம் செல்லாது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் குறிப்பிட்டார்.நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்து, ''ரமண சரஸ்வதி நியமனத்தில் விதிமீறல் இல்லை. மனுவை தள்ளுபடி செய்கிறேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE