புதுடில்லி:தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடக்க உள்ள தேர்தலுக்கான பாதுகாப்பு அம்சம் குறித்து மத்திய உள்துறை செயலருடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியுள்ளது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி சட்டசபைகளுக்கு ஏப். - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனையில் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா பங்கேற்றார்.தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மத்திய போலீஸ் படைகளின் தயார் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. அதனால் கூடுதல் வீரர்கள் பாதுகாப்புக்கு தேவைப்படுவர்; அது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE