மலேஷியாவில் அவசர நிலை: மன்னர் அதிரடி அறிவிப்பு

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
கோலாலம்பூர் : தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மலேஷியாவில், மூன்று மாதங்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 15 ஆயிரமாக இருந்தது.சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து, பாதிப்பு எண்ணிக்கை, 1 லட்சத்து, 38ஆயிரத்து, 224 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர, நாட்டின்
Malaysia, declares, emergency, fight virus

கோலாலம்பூர் : தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மலேஷியாவில், மூன்று மாதங்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 15 ஆயிரமாக இருந்தது.சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து, பாதிப்பு எண்ணிக்கை, 1 லட்சத்து, 38ஆயிரத்து, 224 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர, நாட்டின் பல பகுதிகளில் மழை, வெள்ளத்தால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற காரணங்களால், பிரதமர் முஹிதின் விடுத்த கோரிக்கையை ஏற்று, மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, நேற்று அவசர நிலை பிரகடனம் செய்தார். இதையடுத்து, முஹிதின், 'டிவி'யில், நாட்டு மக்களிடம் பேசியதாவது:


latest tamil news


அவசர நிலையின் போது, ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட மாட்டாது. என் தலைமையிலான அரசு, தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யும்.அதேசமயம், பார்லி., மற்றும் மாநில சட்டசபைகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளன. ஆக.,1 வரை அல்லது அதற்கு முன் வரை, நிலைமையை பொறுத்து, அவசர நிலை அமலில் இருக்கும். அதுவரை பொதுத் தேர்தல் நடக்காது. இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கிடையே, முஹிதின், மலேஷியாவில் கொரோனா பரவலை தடுக்க, மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.கடந்த ஆண்டு மார்ச்சில், ஆட்சிக்கு வந்த முஹிதினுக்கு, 'பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்' என, எதிர்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வந்தன.

ஆளும் கூட்டணியைச் சேர்ந்த, ஐக்கிய மலாய் தேசிய கட்சியும், ஆதரவை வாபஸ் பெறுவதாக மிரட்டி வந்தது. இதனால், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டதை அடுத்து, முஹிதின், அவசர நிலையை அமல்படுத்தி, தற்காலிகமாக, பதவியை தக்க வைத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-202110:33:54 IST Report Abuse
ஆரூர் ரங் இந்திராவும் இப்படித்தான் தேர்தலுக்கு சில காலம் முன்பு அவசர நிலையை அறிவித்துவிட்டு ஆட்சிக் காலத்தையும் நீடித்து ஆறாண்டு சுரண்டி ஆண்டார். பதவிவெறி👹 ஆட்டிப்படைத்தது. ஆனால் அவசர நிலை கொண்டுவந்த பழியை அநியாயமாக🤭 எதிர்க்கட்சிகள் மீது போட்டார் . அவசர நிலை பிரகடனம் செய்து கையெழுத்துப் அதே ஜனாதிபதி பக்ருதீன் அலி தலைமையில் திருமணம் செய்துகொண்டு இப்போ தானொரு அவசரநிலை எதிர்ப்புப் போராளி தியாகி என ஸ்டாலின் சொல்லிக் கொள்கிறார் . நடிப்போ நடிப்பு. இப்போ முஸ்லிம் நாட்டு அவசர நிலையை எதிர்பாரா ? அய்யய்யோ ஹவாலா கடத்தல் வாக்குவங்கி என்னாவது ?
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஜன-202111:05:47 IST Report Abuse
Malick Rajaஉனக்கே பதற்றமாகிவிட்டது .. ஒன்றை மட்டும் சிந்தித்து உனது மனிதத்துவதை உணர்வது நல்லது ... 2014 இப்போதிருப்பவர்கள் சொன்னது என்ன .. அன்று பெட்ரோல் ரூ 67 க்கு விற்றபோது குருடாயில் நூற்றிப்பத்து டாலர்களில் இருந்தது அப்போது நாடாளத்தெரியாதவர்கள் என்று கூக்குரலிட்டது இதே மோடி .. அன்று டாலரின் மதிப்பு ரூ 44 வரை மட்டுமே இருந்தது .. இன்று பெட்ரோல் ரூ 87 ..குருடாயில் விலை வெறும் 35 டாலர்கள் மட்டுமே .. டாலரின் மதிப்போ ரூ 74 இப்போது சொல் உனது நீதி நியாயத்தை .....
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
13-ஜன-202107:27:11 IST Report Abuse
thamodaran chinnasamy அடடே என்ன ஒரு புத்திசாலித்தனம் , மொத்தத்தில் ஆட்சியில் இருக்கணும்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
13-ஜன-202107:00:56 IST Report Abuse
வெகுளி தொப்புள்கொடி கிறித்துவ ஆட்சியாளர்களால் அடிமைகளாக மலேசியா போன்ற நாடுகளுக்கு அடிமைகளாக இழுத்து செல்லப்பட்ட அப்பாவி தமிழனின் இரத்தமும் வேர்வையும் தொப்புள்கொடி இசுலாமிய மன்னரின் அரண்மனையில் தங்கமாய் மின்னுவது மதநல்லிணக்கத்தை காட்டுகிறது...
Rate this:
Raman - kottambatti,இந்தியா
13-ஜன-202109:58:21 IST Report Abuse
Ramanநீயும் உன் சங்கிகளும் முன்னேற முடியாமல் அடுத்தவனை பார்த்து ஊளை விடுவது ஏன் என்று உனக்கு தெரிந்திருக்கும்.. தெரியலைனா பக்கத்தில் உள்ள நல்ல மனிதர்களிடம் பேசிப்பார்......
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஜன-202111:08:43 IST Report Abuse
Malick Rajaஇதைத்தான் அறியாமை என்பார்கள் ..அவனிடம் இருக்கிறது அனுபவிக்கிறான் .. உன்னிடம் இல்லை ஆனால் மோடிஜி அனுபவிக்கிறார் ..காலை உணவு விலை மட்டும் தெரிந்துவிட்டு பின்னர் சொல்லவும் உமது கருத்துக்களை .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X