ஜகார்த்தா:ஆசிய நாடான இந்தோனேஷியா அருகே ஜாவா கடலில் மூழ்கிய பயணியர் விமானத்தின் கறுப்பு பெட்டி எனப்படும் விமானத்தின் தகவல்களை சேமிக்கும் சாதனம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த 'ஸ்ரீவிஜயா ஏர்' என்ற விமான நிறுவனத்தின் விமானம் சமீபத்தில் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்டது. சில நிமிடங்களில் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான இந்த விமானம் மற்றும் அதில் இருந்த 62 பேரை தேடும் பணியும் நடந்து வந்தது.இந்நிலையில் ஜகார்த்தாவுக்கு அருகே ஜாவா கடலில் விமானத்தின்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அங்கு தேடுதல் வேட்டை துவங்கியது.
கடற்படையைச் சேர்ந்த நீச்சல்வீரர்கள் கடலுக்கு அடியில் நடத்திய தேடுதலில் விமானத்தின் ஒரு கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுஉள்ளது. மற்றொரு கறுப்பு பெட்டியையும் தேடும் பணி நடந்து வருவதாக அந்த நாட்டின் ராணுவம் கூறியுள்ளது.
இதன் மூலம் விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான விபரங்கள் தெரியவரும் என நம்பப்படுகிறது.இதற்கிடையே கடலுக்கு அடியில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் ஒருவருடைய அடையாளம் தெரியவந்துள்ளதாக தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE