புதுடில்லி:சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இணைந்து செயல்படுவது குறித்து இந்தியா - வங்கதேச போலீஸ் இடையே பேச்சு நடந்தது.
இந்தியா - வங்கதேச போலீஸ் துறைகளின் பிரதிநிதிகள் இடையேயான 'வீடியோ கான்பரன்ஸ்' முறையிலான பேச்சு நேற்று நடந்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இரு நாட்டு போலீஸ் துறையும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடந்தது.கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவது, ஆள் கடத்தல், கால்நடைகள் கடத்தல், ஆயுதக் கடத்தலை தடுக்க இரு நாட்டு போலீசும் இணைந்து செயல்படுவது குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
உள்நாடு மற்றும் எல்லை பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்தும் பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
122 வீரர்கள் வருகை
வங்கதேசம் உருவாவதற்கு காரணமான இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த 1971 போரின் வெற்றியை நினைவுபடுத்தும் வகையில் பொன்விழா கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வரும் 26ல் நடக்கும் நம் குடியரசு தின விழாவில் வங்கதேச ராணுவம் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்காக 122 வங்கதேச வீரர்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE