அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக தலைவர்களின் 'டுவிட்'

Added : ஜன 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்திட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.- விஜயகாந்த், தே.மு.தி.க., நிறுவனர்எல்லைப் பகுதிகளில் கன்னட இனவெறியர்கள் அத்துமீறி நுழைந்து பெயர்ப் பலகைகளிலுள்ள தமிழ் எழுத்துக்களை அழித்தால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.- சீமான், நாம் தமிழர் தலைமை

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்திட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

- விஜயகாந்த், தே.மு.தி.க., நிறுவனர்

எல்லைப் பகுதிகளில் கன்னட இனவெறியர்கள்

அத்துமீறி நுழைந்து பெயர்ப் பலகைகளிலுள்ள தமிழ் எழுத்துக்களை அழித்தால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

- சீமான், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான புதிய வேளாண் சட்டங்களுக்கு நிரந்தரமாக பிரதமர் மோடி அரசு தடை விதிப்பதே விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வாக அமையும்.

- வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்

தொடர் மழையால் காவிரி டெல்டாவில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

- தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்

வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத்தடை - இது இடைக்கால ஏற்பாடு மட்டுமே. மூன்று சட்டங்களையும் முற்றாக ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதாரவிலை அவசர சட்டம் உடனே இயற்ற வேண்டும்.

- திருமாவளவன், வி.சி., தலைவர்

கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதில் எவ்வித அரசியலுக்கும் இடமளிக்கக்கூடாது. தடுப்பூசிக்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கின்ற மத்திய, மாநில அரசுக்கு த.மா.கா., சார்பில் பாராட்டுகள், நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

- வாசன், த.மா.கா., தலைவர்

மூன்று வேளான் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பு விரிவாக ஆலோசனைகள் செய்யப் பட்டன என்றார் வேளாண் அமைச்சர் தோமர். ஆனால் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட போது அது குறித்த ஆவணம் ஏதும் இல்லை என்கிறது அமைச்சகம். மோடி அரசு பொய்மையின் முழு வடிவம்.

- ஜவாஹிருல்லா, ம.ம.க., தலைவர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜன-202110:18:22 IST Report Abuse
Bhaskaran புது ஓய்வூதிய திட்டம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு மாநில அரசுகள் அமல்செய்வது ... அரசின் வருவாயில் எழுபது விழுக்காடுக்கு மேல் போவதை தவிர்க்க சிதம்பரம் கொண்டுவந்த திட்டம்.ஓய்வூதியர்கள் நீண்டநாட்கள் உயிர்வாழ்கின்றனர் என்று நாடாளுமன்றத்தில் பேசிய மகான் அவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X