கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அறநிலைய கூடுதல் கமிஷனர் நியமனத்திற்கு எதிராக வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Added : ஜன 13, 2021
Share
Advertisement
மதுரை:அறநிலையத்துறை கூடுதல் கமிஷனராக ரமண சரஸ்வதியை நியமித்த தமிழக அரசின் உத்தரவிற்கு எதிராக தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. முன்னாள் அறநிலையத்துறை உதவி கமிஷனர் மதுரை உத்தங்குடி ரமேஷ் மகாதேவ் தாக்கல் செய்த மனு: 'இ-கவர்னன்ஸ்' துறை இணை இயக்குனராக இருந்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரி ரமண சரஸ்வதி இடமாறுதல் அடிப்படையில் அறநிலைத்துறை கூடுதல் கமிஷனராக

மதுரை:அறநிலையத்துறை கூடுதல் கமிஷனராக ரமண சரஸ்வதியை நியமித்த தமிழக அரசின் உத்தரவிற்கு எதிராக தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

முன்னாள் அறநிலையத்துறை உதவி கமிஷனர் மதுரை உத்தங்குடி ரமேஷ் மகாதேவ் தாக்கல் செய்த மனு: 'இ-கவர்னன்ஸ்' துறை இணை இயக்குனராக இருந்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரி ரமண சரஸ்வதி இடமாறுதல் அடிப்படையில் அறநிலைத்துறை கூடுதல் கமிஷனராக டிச.,24 ல் நியமிக்கப்பட்டார். அறநிலையத்துறை கமிஷனர் பதவிக்கு ஐ.ஏ.எஸ்.,அதிகாரியை நியமிக்கலாம்.

அறநிலையத்துறை இணை கமிஷனராக பணிபுரிந்தால், அவரை பதவி உயர்வு அடிப்படையில் கூடுதல் கமிஷனராக நியமிக்க அறநிலையத்துறை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதில் ஐ.ஏஸ்.எஸ்.,அதிகாரியை நியமிக்க இயலாது. ரமண சரஸ்வதியை அறநிலையத்துறை கூடுதல் கமிஷனராக நியமித்ததில் விதிமீறல் உள்ளது.

அது தொடர்பான தமிழக அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். நியமனம் செல்லாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எம்.தண்டபாணி: ரமண சரஸ்வதி நியமனத்தில் விதிமீறல் இல்லை. மனுதாரர் கோரிக்கை ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X