பொது செய்தி

தமிழ்நாடு

பஞ். தலைவர்களுக்கு அடையாள அட்டை

Added : ஜன 13, 2021
Share
Advertisement
தேனி:மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பழனிச்சாமி கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் 2019 டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், ஒன்றிய தலைவர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்வு

தேனி:மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பழனிச்சாமி கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 2019 டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், ஒன்றிய தலைவர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்க கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் ஆகியோருக்கு கலெக்டர் கையழுத்திட்ட போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கவும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அந்தந்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X