அரசியல் செய்தி

தமிழ்நாடு

முஸ்லிம் பெண்ணான நான் பொட்டு வைப்பதில் பெருமை கொள்கிறேன்: பொங்கல் விழாவில் குஷ்பு பேச்சு

Added : ஜன 13, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
நாகர்கோவில்:''முஸ்லிம் பெண்ணான நான் பொட்டு வைப்பதில் பெருமை கொள்கிறேன்'' என கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற பா.ஜ.வின் பொங்கல் விழாவில் குஷ்பு பேசினார்.மேலும் அவர் பேசியதாவது: தேசிய கல்வி கொள்கையை ஹிந்தி திணிப்புன்னு எதிர்க்கட்சியினர் சொல்றாங்க. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் ஒரு மொழியையா உங்கள்மேல் திணிக்க போகிறார். புதிய
 முஸ்லிம் பெண்ணான நான் பொட்டு வைப்பதில் பெருமை கொள்கிறேன்: பொங்கல் விழாவில் குஷ்பு பேச்சு

நாகர்கோவில்:''முஸ்லிம் பெண்ணான நான் பொட்டு வைப்பதில் பெருமை கொள்கிறேன்'' என கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற பா.ஜ.வின் பொங்கல் விழாவில் குஷ்பு பேசினார்.

மேலும் அவர் பேசியதாவது: தேசிய கல்வி கொள்கையை ஹிந்தி திணிப்புன்னு எதிர்க்கட்சியினர் சொல்றாங்க. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் ஒரு மொழியையா உங்கள்மேல் திணிக்க போகிறார். புதிய கல்விகொள்கையில் தாய்மொழியை தாண்டி வேறு மொழி படிக்க வாய்ப்பு கொடுக்கிறோம்.

காங்கிரசில் குடும்ப அரசியல் உள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகையை குடும்பத்தோடு கொண்டாடுவோம். மதம் பெரிது கிடையாது. ஆனால் ஒரு மதத்துக்கு எதிராக செயல்படுவது தான் தவறு.திருமாவளவன் ஹிந்து மதத்துக்கு எதிராக பேசுகிறார். நான் திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் முஸ்லிம் மதத்துக்கு எதிராக குரல் கொடுத்து பாருங்கள்.

பா.ஜ., சிறுபான்மை மதத்திற்கு எதிரானது அல்ல. 2019-ல் பா.ஜ., வெற்றிபெற முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் ஓட்டுபோட்டார்கள்.ஒருகாலத்தில் 2 எம்.பி இருந்த நிலையில் தற்போது 300 எம்.பி.,க்கள் உள்ளனர். 20 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க-வின் மிகப்பெரிய வெற்றி பெறும்.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

நான் தி.மு.க.,வில் இருந்தபோது திருச்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என் வீட்டில் கல்எறிந்தார்கள். வீட்டில் இருந்த குழந்தைகள் கதறினாங்க. பதறிப்போய் ஸ்டாலினை பார்க்க போனேன். அவரை பார்க்க முடியவில்லை. வீட்டில் கல்வீச கூறியதே ஸ்டாலின்தான் என்பது தெரியவந்தது. நான் பா.ஜ.,வுக்கு வந்ததால் பாதுகாப்பாக இருக்கிறேன். இவ்வாறு பேசினார்.

விழாவில் பா.ஜ., மாநில தலைவர் முருகன், மாஜி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் தர்மராஜ் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THASTHAKIR KAJA - Tirunelveli,பஹ்ரைன்
19-ஜன-202115:35:33 IST Report Abuse
THASTHAKIR KAJA Please dont say muslim. You are convert Hindu.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
17-ஜன-202112:24:52 IST Report Abuse
Rafi பெருமைகள் பலவிதம், முஸ்லீம் என்றால் பிரபஞ்சத்தை படைத்து பரிபாலிக்கின்ற அந்த இணை இல்லாத இறைவனை மட்டுமே வணங்க வேண்டும், மேலும் அவனின் அடிமை என்று பொருள். அந்த இறைவனின் சட்டத்தை மீறுபவர்கள் இஸ்லாமியர்கள் என்று வேண்டுமானால் சொல்லி கொள்ளலாம், உண்மையில் மீறுபவர்கள் இஸ்லாமியர் இல்லை. அந்த இஸ்லாமிய சட்டப்படி உருவ வழிபாடு நடத்துபவர்களை திருமணம் செய்ய அனுமதி கிடையாது என்ற அல்லாஹ்வின் கட்டளை என்பதாவது தெரிந்திருந்தால் முஸ்லீம் என்று சொல்லி கொள்ள உரிமை உண்டு. நீங்கள் பொட்டு வைத்து கொள்ளுங்கள், உருவ வழிபாடு செய்து கொள்ளுங்கள் அது உங்களுக்கு பெருமையாக இருக்கலாம். அது முஸ்லிம்களுக்கு பெருமை கிடையாது. அவரவர்கள் மதம் அவரவர்களுக்கே என்றும் மாற்று மத மக்களோடு இணக்கமாக இருக்க அல்லாஹ் கூறி உள்ளதையே ஏற்று இஸ்லாமியர்கள் பெருமை பட்டு கொள்வார்கள். இந்தியாவின் அடிப்படை தத்துவமும் வேற்றுமையில் ஒற்றுமை அதுவே உலகமும் இந்தியாவின் மீது பெருமை கொள்கின்றது.
Rate this:
P Ravindran - Chennai,இந்தியா
17-ஜன-202114:25:26 IST Report Abuse
P Ravindran"இஸ்லாமிய சட்டப்படி உருவ வழிபாடு நடத்துபவர்களை திருமணம் செய்ய அனுமதி கிடையாது" : பின் ஏன் இந்து பெண்களை திருமண செய்து கொள்ள வேண்டும்? மாற்றுவதற்கா ?...
Rate this:
Cancel
சிவ.இளங்கோவன் . - நாளைய முதல்வன் ஸ்டாலின் ,இந்தியா
16-ஜன-202110:45:02 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . வீட்டில் கல்வீச கூறியதே ஸ்டாலின்தான் என்பது தெரியவந்தது. நான் பா.ஜ.,வுக்கு வந்ததால் பாதுகாப்பாக இருக்கிறேன். இவ்வாறு பேசினார் .... இதே கதைய நீ காங்கிரசில் சேர்ந்தபோது சொல்லியிருந்தா நம்பியிருப்போம் குப்பு .. ஆனால் இன்று புதுசா கதை சொன்னா யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . தினமும் நீ அவிழ்க்கும் கதைகளை சீமானிடம் சொல்லு அவன் உனக்கு மேல கதையை சொல்வான் ..
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
16-ஜன-202113:48:11 IST Report Abuse
Dr. Suriyaஅண்ணா நகர் ரமேசு, அரியலூர் சாதிக்கு இவங்களாவது தெரியமா ?...
Rate this:
சிவ.இளங்கோவன் . - நாளைய முதல்வன் ஸ்டாலின் ,இந்தியா
16-ஜன-202115:16:31 IST Report Abuse
சிவ.இளங்கோவன் .கோவை கல்லூரி மாணவிகள் பஸ்ஸில் எரித்தது .. தூத்துக்குடி துப்பாக்கி சூடு இப்படி பல தெரியும் ....
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
16-ஜன-202116:04:10 IST Report Abuse
Dr. Suriyaகீழ் வெண்மணி விவசாயிகள் கொலை ... லெவியை நீக்கி பல கோடி ஏழை மக்களின் வயிற்றில் அடித்து அவர்களை எலி கறி சாப்பிட கட்டுமரம் சொன்னது கூட தெரியுமா?.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X