நாகர்கோவில்:''முஸ்லிம் பெண்ணான நான் பொட்டு வைப்பதில் பெருமை கொள்கிறேன்'' என கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற பா.ஜ.வின் பொங்கல் விழாவில் குஷ்பு பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது: தேசிய கல்வி கொள்கையை ஹிந்தி திணிப்புன்னு எதிர்க்கட்சியினர் சொல்றாங்க. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் ஒரு மொழியையா உங்கள்மேல் திணிக்க போகிறார். புதிய கல்விகொள்கையில் தாய்மொழியை தாண்டி வேறு மொழி படிக்க வாய்ப்பு கொடுக்கிறோம்.
காங்கிரசில் குடும்ப அரசியல் உள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகையை குடும்பத்தோடு கொண்டாடுவோம். மதம் பெரிது கிடையாது. ஆனால் ஒரு மதத்துக்கு எதிராக செயல்படுவது தான் தவறு.திருமாவளவன் ஹிந்து மதத்துக்கு எதிராக பேசுகிறார். நான் திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் முஸ்லிம் மதத்துக்கு எதிராக குரல் கொடுத்து பாருங்கள்.
பா.ஜ., சிறுபான்மை மதத்திற்கு எதிரானது அல்ல. 2019-ல் பா.ஜ., வெற்றிபெற முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் ஓட்டுபோட்டார்கள்.ஒருகாலத்தில் 2 எம்.பி இருந்த நிலையில் தற்போது 300 எம்.பி.,க்கள் உள்ளனர். 20 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க-வின் மிகப்பெரிய வெற்றி பெறும்.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
நான் தி.மு.க.,வில் இருந்தபோது திருச்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என் வீட்டில் கல்எறிந்தார்கள். வீட்டில் இருந்த குழந்தைகள் கதறினாங்க. பதறிப்போய் ஸ்டாலினை பார்க்க போனேன். அவரை பார்க்க முடியவில்லை. வீட்டில் கல்வீச கூறியதே ஸ்டாலின்தான் என்பது தெரியவந்தது. நான் பா.ஜ.,வுக்கு வந்ததால் பாதுகாப்பாக இருக்கிறேன். இவ்வாறு பேசினார்.
விழாவில் பா.ஜ., மாநில தலைவர் முருகன், மாஜி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் தர்மராஜ் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE