சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் கடல் கொந்தளிப்பு ராட்சத அலையால் வீடுகள் சேதம்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் கொந்தளிப்பால் உருவான ராட்சத அலையால் மீனவர்களின் குடிசைகள் சேதமடைந்தன.வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஜன.,10 முதல் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் சூறைகாற்று வீசி தொடர் மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் நள்ளிரவு பாம்பனில் கடல் கொந்தளித்து 4 முதல் 6 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன. பாம்பன் தெற்குவாடி
 பாம்பனில் கடல் கொந்தளிப்பு ராட்சத அலையால் வீடுகள் சேதம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் கொந்தளிப்பால் உருவான ராட்சத அலையால் மீனவர்களின் குடிசைகள் சேதமடைந்தன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஜன.,10 முதல் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் சூறைகாற்று வீசி தொடர் மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் நள்ளிரவு பாம்பனில் கடல் கொந்தளித்து 4 முதல் 6 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன. பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் உள்ள மீனவர் குடிசைகளில் நீர் புகுந்ததால் துாக்கத்தில் இருந்த மீனவர்கள் அவசர அவசரமாக வீடுகளில் இருந்து வெளியேறினர்.

இதில் மீனவர்கள் தனம், சவேரியார் அடிமை, வினால்டன், அல்ட்ரின் ஆகியோரின் குடிசைகள், ஒரு ஆஸ்பெட்டாஸ் கூரை வீடு இடிந்து விழுந்தன. 10க்கும் மேலான மீனவர்களின் குடிசைகள் சேதமடைந்தன.3ம் நாளான நேற்றும் ராமேஸ்வரம் பகுதியில் கனமழை பெய்தது. ரமேஸ்வரம், தனுஷ்கோடி தேசிய சாலையில் மழைநீர் தேங்கியது. ஜன.,14 வரை கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

மீனவர்களுக்கு தடை: தொடர் மழை, கடல் கொந்தளிப்பால் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்க மீன்துறை தடை விதித்ததால் நேற்று முதல் பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X