வடவள்ளி:வடவள்ளியில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர் கோவிலில், கடந்த, 8ம் தேதி முதல், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நாள்தோறும் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு லட்ச்சார்ச்சனை நடைபெற்றது. அனுமன் ஜெயந்தியொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 6:30 மணிக்கு மார்கழி பூஜை நடந்தது. பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர், தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல், 1:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு பிரத்யங்கிரா தேவிக்கு, நிகும்பளா யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE