சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் டிரைவர் மரணம் பயணிகள் தப்பினர்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
பேரூர்:பேரூர் அருகேயுள்ள பச்சாபாளையம், கிருஷ்ணா காலனியை சேர்ந்தவர் மல்லீஸ்வரன்,39. அரசு போக்குவரத்து கழகம், சுங்கம் டெப்போவில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலையில், சாடிவயல் - காந்திபுரத்துக்கு செல்லும் தடம் எண்- 14 இ டவுன் பஸ்சை இயக்கினார். ஆலாந்துறை அரசு பள்ளி, புதுார் ஸ்டாப் அருகில் பஸ் சென்று கொண்டிருந்த போது, மல்லீஸ்வரனுக்கு திடீரென நெஞ்சு வலி
 பஸ் டிரைவர் மரணம் பயணிகள் தப்பினர்

பேரூர்:பேரூர் அருகேயுள்ள பச்சாபாளையம், கிருஷ்ணா காலனியை சேர்ந்தவர் மல்லீஸ்வரன்,39. அரசு போக்குவரத்து கழகம், சுங்கம் டெப்போவில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில், சாடிவயல் - காந்திபுரத்துக்கு செல்லும் தடம் எண்- 14 இ டவுன் பஸ்சை இயக்கினார். ஆலாந்துறை அரசு பள்ளி, புதுார் ஸ்டாப் அருகில் பஸ் சென்று கொண்டிருந்த போது, மல்லீஸ்வரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதே இடத்தில் ஓரமாக பஸ்சை நிறுத்தி விட்டு, அப்படியே ஸ்டீயரிங்கில் சாய்ந்தார்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின், ஆம்புலன்சில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மருத்துவர்கள் பரிசோதித்தபோது, மல்லீஸ்வரன் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. மாரடைப்பு ஏற்பட்டவுடன் பஸ்சை ஓரமாக நிறுத்தியதால், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X