பொது செய்தி

தமிழ்நாடு

மேல்மலையனூரில் பக்தர்கள் இன்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

Added : ஜன 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
செஞ்சி:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் இன்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், கொரோனா நோய் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை செய்துள்ளனர். மேலும், வழக்கமான ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவம் நடத்தாமல் கோவில் பிரகாரத்தில் நடத்தி வருகின்றனர்.நேற்று
 மேல்மலையனூரில் பக்தர்கள் இன்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் இன்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், கொரோனா நோய் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை செய்துள்ளனர். மேலும், வழக்கமான ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவம் நடத்தாமல் கோவில் பிரகாரத்தில் நடத்தி வருகின்றனர்.

நேற்று மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர்.இரவு 7மணிக்கு கோவில் பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. கோவில் பூசாரிகள் தாலாட்டு, அம்மன் ஆராதனை பாடல்களை பாடி பூஜை செய்தனர். இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம், ஆய்வாளர் அன்பழகன், மேலாளர் மணி, சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
13-ஜன-202119:15:01 IST Report Abuse
RADE அதிகாரிகள் மட்டும் கலந்துக்கலாம், குடும்பத்துடன் கலந்து கொண்டார்களா என்று கூறவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X