செஞ்சி:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் இன்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், கொரோனா நோய் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை செய்துள்ளனர். மேலும், வழக்கமான ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவம் நடத்தாமல் கோவில் பிரகாரத்தில் நடத்தி வருகின்றனர்.
நேற்று மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர்.இரவு 7மணிக்கு கோவில் பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. கோவில் பூசாரிகள் தாலாட்டு, அம்மன் ஆராதனை பாடல்களை பாடி பூஜை செய்தனர். இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம், ஆய்வாளர் அன்பழகன், மேலாளர் மணி, சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE