இந்தியா

சபரிமலை பொன்னம்பலமேட்டில் நாளை மாலை 6:30க்கு மகரஜோதி

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சபரிமலை: மகரவிளக்கு நாளில், அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம் அடங்கிய பவனி, பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது. நாளை மாலை, 6:30க்கு, பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காட்சி தருகிறது.கேரள மாநிலம், சபரி மலை அய்யப்பன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை மாலை, மகர விளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும்
 சபரிமலை பொன்னம்பலமேடு, நாளை மாலை 6:30, மகரஜோதி

சபரிமலை: மகரவிளக்கு நாளில், அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம் அடங்கிய பவனி, பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது. நாளை மாலை, 6:30க்கு, பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காட்சி தருகிறது.
கேரள மாநிலம், சபரி மலை அய்யப்பன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை மாலை, மகர விளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது.


latest tamil news



கொரோனா கட்டுப்பாடுகளால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது.பந்தளம் அரண்மனையில் தான், அய்யப்பன் வளர்ந்தார். சபரிமலை சென்ற பின், அய்யப்பனைக் காண, பந்தளம் மன்னர் ஆபரணங்களுடன் சென்றார்.அதை நினைவு படுத்தும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும், பந்தளம் மன்னர் பிரதிநிதியுடன் திருவாபரணபவனி சபரிமலை வருவதாக வரலாறு கூறுகிறது.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள், சாஸ்தா கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

மதியம், 12:30க்கு பவனி புறப்படுவதற்கான சடங்குகள் துவங்கின. ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டது.மதியம், 1:00 மணிக்கு சரண கோஷங்கள் முழங்க, திருவாபரண பவனி புறப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் போலீசார், தேவசம்போர்டு ஊழியர்கள் மட்டுமே பவனியில் வருகின்றனர்.

இந்த ஆண்டு பந்தளம் மன்னர் குடும்பத்தில் குழந்தை பிறந்துள்ளதால், ராஜ பிரதிநிதியாக யாரும் பவனியில் வரவில்லை.முக்கிய திருவாபரண பெட்டியை, குருசாமி கங்காதரன் சுமந்து வந்தார். திருவாபரணம் நாளை மாலை, 6:25க்கு சன்னிதானம் வந்து சேரும்.தீபாராதனை முடிந்ததும், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும்.



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தா்மசிந்தனை - வாடிகன் மெயின் ரோடு மெக்கா மதீனா 786.,இந்தியா
13-ஜன-202116:19:01 IST Report Abuse
தா்மசிந்தனை மகர ஜ்யோதி யாராலும் எங்கும் ஏற்றப்படுவதில்லை யாரோ எதுவோ சொன்னால் அதை அப்படியே நம்பக்கூடாது நீங்களே நேரில் சென்று பார்த்து பிறகு சொல்லுங்கள் நான் மகர ஜோதி தரிசனம் செய்து இருக்கிறேன் அது காந்த மலை மீது விண்ணில் தெரியும் நட்சத்திரம். பொன்னம்பல மேட்டில் அங்குள்ள காட்டுவாசிகள் ஜோதி தெரியும் அதே நேரத்தில் ஐயப்பனுக்கு தீப ஆராதனை செய்வார்கள் இத நாங்கள் தான் செய்வோம் என்று தேவஸ்தானம் அவர்களோடு சண்டை போடுகிறது மகிஷி வதம் முடிந்த பிறகு ரிஷிகளும் முனிவர்களும் பொன்னம்பல மேட்டில் ஐயப்பனுக்கு தீப ஆராதனை செய்து வழி பட்டர்கள் அதை இன்று வரை அந்த காட்டுவாசிகள் அதே நாளில் தொடர்ந்து செய்து வருகிறார்கள். தேவஸ்தானம் ஏன் அவர்களோடு சண்டை போடுகிறது அதனால் தான் இந்த பிரச்சினை. இது புரியாமல் கருத்து யாரும் போடவேண்டாம் . மீண்டும் சொல்கிறேன் /// நான் மகர ஜோதி தரிசனம் செய்து இருக்கிறேன் மகர ஜ்யோதி யாராலும் எங்கும் ஏற்றப்படுவதில்லை அது காந்த மலை மீது விண்ணில் தெரியும் நட்சத்திரம். /// தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.. நன்றி
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜன-202110:11:09 IST Report Abuse
Bhaskaran அறுபத்துஏழுபதாண்டுகளுக்குமுன் இந்த ஜோதியெல்லாம் இருந்ததா .கேரளா அரசும் தேவஸ்வம் போர்டு வனத்துறை மூவரும் சேர்ந்து இம்மாதிரி ஜோதி ஏற்பாடு செய்கின்றார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் .கேரளா பகுத்தறிவாளர்கள் சங்கம் போன்றவை நிரூபித்துவிட்டார்களென்று படித்துள்ளேன் உண்மை ஐயப்பனுக்கே வெளிச்சம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X