புது டில்லி: கடந்த 2020-ல் பல மாதங்களாக உச்சத்திலேயே இருந்த சில்லறை பணவீக்கம் டிசம்பரில் குறைந்து 4.59% ஆகியிருப்பதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விலை குறியீட்டால் சில்லறை பணவீக்கம் அளவிடப்படுகிறது. உணவு பொருட்களின் விலை குறைவால் கடந்த டிசம்பர் மாத பணவீக்கம் குறைந்துள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி உணவு பணவீக்கம் டிசம்பர் மாதம் 9.5 சதவீதத்தில் இருந்து 3.41 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த முன்னேற்றம் ரிசர்வ் வங்கிக்கு எதிர்கால நிதிக் கொள்கை நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்க அதிக வாய்ப்பளிக்கும். டிசம்பரில் பதிவாகியுள்ள பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் 2 முதல் 6 சதவீதம் என்ற இலக்கிற்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் குறைந்திருப்பது இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாட்டின் தொழில்துறை உற்பத்தி நவம்பரில் குறைந்துவிட்டதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பரில் தொழில்துறை நடவடிக்கைகளில் 1.6% சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி அட்டவணை காட்டுகிறது. அதே போல் உற்பத்தி துறை வளர்ச்சி, சுரங்கத் துறை வளர்ச்சியும் கணிசமாக சரிவை சந்தித்துள்ளன. மின் உற்பத்தி துறை மட்டும் 3.5% அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE