சென்னை:டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கு, மனிதநேயம் கட்டணமில்லா கல்வியகத்தில் இருந்து, 21 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் கவுரவ இயக்குனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழக நீதித்துறையில், உரிமையியல் நீதிபதி பணிக்கான, முதன்மை தேர்வு முடிவுகளை, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. இதில், 58 பேர் தேர்ச்சி பெற்றதில், 21 பேர் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முக தேர்வில் பங்கேற்க, வரும், 21ம் தேதி முதல், தமிழக மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் ஆடிட்டோரியத்தில் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, இன்று முதல், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE