பொது செய்தி

தமிழ்நாடு

சிலம்பரசனுக்கு எதிராக சதி டி.ராஜேந்தர் பரபரப்பு புகார்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
சென்னை:சட்டத்திற்கு புறம்பாக, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், சிலம்பரசன் படத்திற்கு எதிராக சதி செய்வதாக, அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் புகார் கூறியுள்ளார்.அவர் அளித்த பேட்டி:பொங்கலை முன்னிட்டு, சிலம்பரசன் நடித்த, 'ஈஸ்வரன்' படம், நாளை வெளியாகிறது. இதை நிறுத்த, பலர் சதி செய்கின்றனர். தயாரிப்பாளர் சங்க தேர்தலில், நான் போட்டியிட்டு, 400 ஓட்டுகள் பெற்றேன்.கள்ள

சென்னை:சட்டத்திற்கு புறம்பாக, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், சிலம்பரசன் படத்திற்கு எதிராக சதி செய்வதாக, அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் புகார் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி:பொங்கலை முன்னிட்டு, சிலம்பரசன் நடித்த, 'ஈஸ்வரன்' படம், நாளை வெளியாகிறது. இதை நிறுத்த, பலர் சதி செய்கின்றனர். தயாரிப்பாளர் சங்க தேர்தலில், நான் போட்டியிட்டு, 400 ஓட்டுகள் பெற்றேன்.கள்ள ஓட்டுகளால் தான், அவர்கள் ஜெயித்தனர். அதுகுறித்த வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளது.

'ஈஸ்வரன்' படத்திற்கு எதிராக செய்யும் சதி, எனக்கு எதிராக செய்யும் வேலைகளே. 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்காக, சிலம்பரசன் தன் சம்பளத்தில், 3.5 கோடி ரூபாயை விட்டுக் கொடுத்தார்.மற்றபடி, தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டால், அதை, அவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு முன், விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்டப்பஞ்சாயத்து நடத்தி, சிலம்பரசன் நடித்து வெளியாகும் படங்களின் போது, 2.5 கோடி ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்றனர்.இதுபோல், எந்த ஒரு நடிகருக்கும் நடந்ததில்லை.இதுகுறித்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது, சிலம்பரசன் படத்திற்கு எதிராக சதி செய்கின்றனர்.

'தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஒப்புதல் பெறாமல், ஈஸ்வரன் படத்தை வெளியிடக் கூடாது' என, 'க்யூப்' நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.அதுவும், அமைச்சர் ஒருவரின் பெயரை சொல்லி மிரட்டியுள்ளனர். சட்டத்திற்கு எதிராக, தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலை பார்க்கின்றனர்.இவ்வாறு, ராஜேந்தர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X