திண்டுக்கல்:'பழநி மலை கோவிலில், நாளை முதல் தினமும், 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி செய்திக்குறிப்பு:பொங்கல் தொடர் விடுமுறை, தைப்பூசத்தால் நாளை முதல் பழநி முருகன் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவர். இதனால், நாளை முதல் ஜன., 31 வரை, தினமும், 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.தைப்பூச விழா ஜன., 22ல் கொடியேற்றத்துடன் துவங்கி, ஜன., 31ல் தெப்ப உற்ஸவத்துடன் முடிவடைகிறது. ஏராளமான பக்தர்கள், பாதயாத்திரை செல்கின்றனர்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக, 10 வயதிற்கு கீழ், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொடர் காய்ச்சல், சுவாச பிரச்னை, இதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம். பக்தர்கள் கட்டாயம், www.tnhrce.gov.in ல் முன்பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE