கோவை:கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பச்சார்பாளையத்தை சேர்ந்தவர் தாமோதரன், 71.பொங்கலூர் தொகுதியில், 2001ல் வெற்றி பெற்று ஜெ., அமைச்சரவையில் கால்நடை துறை அமைச்சராக பதவி வகித்தார்.கடந்த, 2010ல் கோவை மாவட்ட, 'ஆவின்' தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த டிச.,15ம் தேதி கொரோனா பாதிப்புக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று நீங்கியது. நுரையீரல் பாதிப்பால் நேற்று மாலை, 6:05 மணிக்கு இறந்தார். மறைந்த தாமோதரனுக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE