நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு இசங்கன்விளையை சேர்ந்த சுந்தரவடிவு, இறந்த நிலையில் அவருக்கான பொங்கல் பரிசு ரூ.2500 எடுத்த ரேஷன்கடையில் அதிகாரி விசாரித்தார்.
2018ல் சுந்தரவடிவு இறந்த பிறகு அவரது ரேஷன் கார்டில் பொருள் வாங்கவில்லை. வேறு குடும்ப உறுப்பினரின் பெயர் இல்லாததால் கார்டை ரத்து செய்வதாக கூறி 3 மாதத்துக்கு முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் வாங்கினர்.
இந்நிலையில் சுந்தரவடிவுக்கு பொங்கல் பரிசு ரூ.2500 வழங்கப்பட்டதாக அவரது மகன் பொன்னையாவின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி சென்றது. இதுபற்றி கேட்டதற்கு ரேஷன் ஊழியர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது. மாவட்ட வழங்கல் அதிகாரி ரேஷன்கடையில் விசாரணை நடத்தி வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE