ஊட்டி:'கேரளாவில் இருந்து இரவு நேரங்களில் குறுக்குப் பாதையில், நீலகிரியில் நுழையும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் பறவை காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக, நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள, நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு, தாளூர் சோதனை சாவடிகளில் கால்நடை துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். சில குறுக்குப் பாதைகளின் வழியாக, தமிழகத்துக்குள் வாகனங்கள் வருவதாக புகார் எழுந்துள்ளது.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறுகையில்,''கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை சோதனை செய்து, கோழி, வாத்துகள் மற்றும் அதன் முட்டை மற்றும் அதை சார்ந்த பொருட்கள் கொண்டு வந்தால், வாகனத்தை கேரளாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குறுக்கு பாதையில் லாரிகள் தமிழகம் நுழைவதாக புகார் வந்துள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து பாதைகளிலும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களில் கொண்டுவரப்படும், கோழி, வாத்து மற்றும் பிற பொருட்களை அழிப்பதுடன், வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE