ஆக்கிரமிப்பால் நெரிசல்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
திருப்பூர், தாராபுரம் ரோடு - கே.எஸ்.சி., ஸ்கூல் ரோடு சந்திப்பு, புளியமரம் ஸ்டாப்பில், ரோட்டோர ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.-தீனதயாளன், தாராபுரம் ரோடு.காத்திருக்கும் ஆபத்துதிருப்பூர் பி.என்., ரோடு, மில்லர் ஸ்டாப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. கீழே விழும் அபாயம் உள்ளது.-சந்தோஷ்குமார், பி.என்., ரோடு.வீணாகும் தண்ணீர்1.

திருப்பூர், தாராபுரம் ரோடு - கே.எஸ்.சி., ஸ்கூல் ரோடு சந்திப்பு, புளியமரம் ஸ்டாப்பில், ரோட்டோர ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.-தீனதயாளன், தாராபுரம் ரோடு.காத்திருக்கும் ஆபத்துதிருப்பூர் பி.என்., ரோடு, மில்லர் ஸ்டாப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. கீழே விழும் அபாயம் உள்ளது.-சந்தோஷ்குமார், பி.என்., ரோடு.வீணாகும் தண்ணீர்1. நொச்சிபாளையம் பிரிவில் இருந்து அல்லாளபுரம் செல்லும் சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகிறது. உடைந்துள்ள குழாய்களை மாற்ற வேண்டும்.- உலகநாதன், அல்லாளபுரம்.2. திருப்பூர், மண்ணரை, வெங்கடாசலபதி நகரில் உள்ள பிளாஸ்டிக்டிரம் உடைந்து மூன்று மாதமாகிறது. தண்ணீர் தொடர்ந்து வீணாகி வருகிறது.- ராஜேஷ், மண்ணரை.குப்பை அள்ளுங்க!பல்லடம், அருள்புரம், உப்பிலிபாளையம் பகுதியில், 20 நாட்களாக அள்ளாத குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை அள்ளிச் செல்ல வேண்டும்.- வளர்மதி, உப்பிலிபாளையம்.கட்டுமான பொருள் இடையூறுதிருப்பூர், ராயபுரம் மெயின்ரோட்டில் கட்டுமான பணிக்கான கல், செங்கல், மணல் ஆக்கிரமித்து அதிகளவில் கொட்டி வைத்துள்ளனர். வாகனங்கள் சென்று வர இடையூறு ஏற்படுகிறது.- சாமியப்பன், ராயபுரம்.மழைநீர் தேக்கம்செம்மிபாளையத்தில் இருந்து சாமிகவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் குழியில் மழைநீர் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.-தவபாண்டியன், செம்மிபாளையம்.போலீசார் கவனத்துக்குதிருப்பூர், பி.என்.,ரோடு, நெசவாளர் காலனி, பஸ் ஸ்டாப்பில் இருந்து மேட்டுப்பாளையம் வரை ரோட்டோரம் வாகனங்கள் தாறுமாறாக பார்க்கிங் செய்யப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- மாதவன், பி.என்., ரோடு.அலுவலகத்தில் ஆபத்துதிருப்பூர், பல்லடம் ரோடு, காட்டன் மார்க்கெட் தபால் அலுவலக கட்டடம் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.-கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ரோடு.மழைநீரால் அவதிதிருப்பூர், கருமாரம்பாளையம், வாய்க்கால்மேடு பகுதியில் மழைநீர் வழிந்தோட வழியின்றி சாலையில் தேங்கியுள்ளது. பாதசாரிகள் நடந்து செல்ல கூட வழியில்லை.- காவ்யா, வாய்க்கால்மேடு.சாலையை சீரமைக்கலாமே!திருப்பூர், லட்சுமி நகரில் இருந்துடி.எம்.எப்., பாலம் செல்லும் வழி குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.- அருண்பிரகாஷம், லட்சுமி நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X