திருப்பூர், தாராபுரம் ரோடு - கே.எஸ்.சி., ஸ்கூல் ரோடு சந்திப்பு, புளியமரம் ஸ்டாப்பில், ரோட்டோர ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.-தீனதயாளன், தாராபுரம் ரோடு.காத்திருக்கும் ஆபத்துதிருப்பூர் பி.என்., ரோடு, மில்லர் ஸ்டாப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. கீழே விழும் அபாயம் உள்ளது.-சந்தோஷ்குமார், பி.என்., ரோடு.வீணாகும் தண்ணீர்1. நொச்சிபாளையம் பிரிவில் இருந்து அல்லாளபுரம் செல்லும் சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகிறது. உடைந்துள்ள குழாய்களை மாற்ற வேண்டும்.- உலகநாதன், அல்லாளபுரம்.2. திருப்பூர், மண்ணரை, வெங்கடாசலபதி நகரில் உள்ள பிளாஸ்டிக்டிரம் உடைந்து மூன்று மாதமாகிறது. தண்ணீர் தொடர்ந்து வீணாகி வருகிறது.- ராஜேஷ், மண்ணரை.குப்பை அள்ளுங்க!பல்லடம், அருள்புரம், உப்பிலிபாளையம் பகுதியில், 20 நாட்களாக அள்ளாத குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை அள்ளிச் செல்ல வேண்டும்.- வளர்மதி, உப்பிலிபாளையம்.கட்டுமான பொருள் இடையூறுதிருப்பூர், ராயபுரம் மெயின்ரோட்டில் கட்டுமான பணிக்கான கல், செங்கல், மணல் ஆக்கிரமித்து அதிகளவில் கொட்டி வைத்துள்ளனர். வாகனங்கள் சென்று வர இடையூறு ஏற்படுகிறது.- சாமியப்பன், ராயபுரம்.மழைநீர் தேக்கம்செம்மிபாளையத்தில் இருந்து சாமிகவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் குழியில் மழைநீர் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.-தவபாண்டியன், செம்மிபாளையம்.போலீசார் கவனத்துக்குதிருப்பூர், பி.என்.,ரோடு, நெசவாளர் காலனி, பஸ் ஸ்டாப்பில் இருந்து மேட்டுப்பாளையம் வரை ரோட்டோரம் வாகனங்கள் தாறுமாறாக பார்க்கிங் செய்யப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- மாதவன், பி.என்., ரோடு.அலுவலகத்தில் ஆபத்துதிருப்பூர், பல்லடம் ரோடு, காட்டன் மார்க்கெட் தபால் அலுவலக கட்டடம் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.-கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ரோடு.மழைநீரால் அவதிதிருப்பூர், கருமாரம்பாளையம், வாய்க்கால்மேடு பகுதியில் மழைநீர் வழிந்தோட வழியின்றி சாலையில் தேங்கியுள்ளது. பாதசாரிகள் நடந்து செல்ல கூட வழியில்லை.- காவ்யா, வாய்க்கால்மேடு.சாலையை சீரமைக்கலாமே!திருப்பூர், லட்சுமி நகரில் இருந்துடி.எம்.எப்., பாலம் செல்லும் வழி குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.- அருண்பிரகாஷம், லட்சுமி நகர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE