பொது செய்தி

தமிழ்நாடு

சுவாமி விவேகானந்தர் 158வது ஜெயந்தி விழா

Added : ஜன 13, 2021
Share
Advertisement
வெள்ளகோவில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் சுவாமி விவேகானந்தரின் 158 ம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.மாவட்ட பொது செயலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். நகர தலைவர் சதீஸ்வரன், ஒன்றிய தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ்., நகர தலைவர் மகாதேவன் துவக்கி வைத்தார். ஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பரிமளம்
 சுவாமி விவேகானந்தர்  158வது ஜெயந்தி விழா

வெள்ளகோவில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் சுவாமி விவேகானந்தரின் 158 ம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.மாவட்ட பொது செயலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். நகர தலைவர் சதீஸ்வரன், ஒன்றிய தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ்., நகர தலைவர் மகாதேவன் துவக்கி வைத்தார். ஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பரிமளம் மற்றும் நகர, ஒன்றிய இந்து இளைஞர் முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். ஊர்வலம், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கி முத்தூர் ரோடு முக்கிய வீதி வழியாக கடைவீதி அடைந்தது.---முத்தூர் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு, பள்ளி தாளாளர் சண்முகம் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் அசோக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.'எழுமின்... விழுமின்' என்னும் தலைப்பில், பள்ளியின் முதல்வர் ஆனந்த்குமார் பேசினார். கடந்த 2020ம் ஆண்டு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. முன்னதாக முத்தூர் ஸ்ரீ நவா மகளிர் கல்லுாரி அபிராமி வரவேற்றார். பள்ளி முதல்வர் நடராஜ் நன்றி கூறினார்.---திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில், விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. விவேகானந்தா சேவா அறக்கட்டளை தலைவர் குமாரசாமி, குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். துணை தலைவர் ஞானபூபதி, தலைமை வகித்தார். முன்னதாக, பள்ளி தாளாளர் சுவாமிநாதன், வரவேற்றார். விழாவில், காணொலி காட்சி வாயிலாக கருத்தரங்கம், கவியரங்கம், விவேகானந்தரின் வாழ்வியல் நிகழ்ச்சி குறித்து விளக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர் தீபலட்சுமி, நன்றி கூறினார்.---திருப்பூர் மாநகர் இந்து இளைஞர் முன்னணி சார்பில், விவேகானந்தரின், 158வது ஜெயந்தி நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் தின விழா, திருப்பூர் சிறுபூலுவபட்டி, அம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம், கோட்ட செயலாளர் மோகனசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.அதில், மதன் ரவிசந்திரன் பங்கேற்று, விவேகானந்தர் குறித்து சிறப்புரையாற்றினார். இந்து இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் சுரேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, விவேகானந்தரின் படத்துக்கு மலர் துாவி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.---திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் சார்பில், நடந்த விழாவில், டாக்டர் மரகதம் குத்துவிளக்கேற்றி வைத்தார். சேவலாயம் பொறுப்பாளர் செந்தில்நாதன் வரவேற்றார். கோவை, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் சுவாமி பக்திவ்ரதானந்தஜி மஹராஜ் பங்கேற்று, விவேகானந்தரின் வரலாறு, அவரின் பெருமைகள் குறித்து பேசினார். அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சுனில்குமார், திருப்பூர் சேவா பாரதி மற்றும் தெய்வராஜ் ஆகியோருக்கு விவேகானந்தா விருது வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X