பொது செய்தி

தமிழ்நாடு

'நாடுகாணி' புதிய வனச்சரகம் துவக்கம்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் தேவாலா வனச் சரகத்தின் ஒரு பகுதியை பிரித்து, நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்துடன் இணைத்து, நாடுகாணி என்ற புதிய வனச்சரகம் துவங்கப்பட்டுள்ளது.கூடலுார் வனக்கோட்டத்தில், சேரம்பாடி, பிதர்காடு, தேவாலா, ஓவேலி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. மேலும், நாடுகாணி, ஜீன்புல் சூழல் சுற்றுலா தாவர மையம் உள்ளது.இந்நிலையில், தேவாலா வனச்சரகத்திற்கு உட்பட்ட, ஆமைகுளம் பீட் (காவல்

கூடலுார்:கூடலுார் தேவாலா வனச் சரகத்தின் ஒரு பகுதியை பிரித்து, நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்துடன் இணைத்து, நாடுகாணி என்ற புதிய வனச்சரகம் துவங்கப்பட்டுள்ளது.கூடலுார் வனக்கோட்டத்தில், சேரம்பாடி, பிதர்காடு, தேவாலா, ஓவேலி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. மேலும், நாடுகாணி, ஜீன்புல் சூழல் சுற்றுலா தாவர மையம் உள்ளது.இந்நிலையில், தேவாலா வனச்சரகத்திற்கு உட்பட்ட, ஆமைகுளம் பீட் (காவல் பகுதி)பகுதியை நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்துடன் இணைத்து, 'நாடுகாணி' என்ற பெயரில் புதிய வனச்சரகம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான வனச்சரகர், வனவர், வனக்காப்பாளர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு, வன ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'இதன், வனச்சரக அலுவலகம், கூடலுார், செம்பாலா ஈட்டிமுலாவில் உள்ள வன ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X