பொது செய்தி

தமிழ்நாடு

'அரசு திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால மூலதனம்' : இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் அறிவுரை

Added : ஜன 13, 2021
Share
Advertisement
ஊட்டி:'மாணவர்கள் அரசு வழங்கும் திட்டங்களை எதிர்கால மூலதனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி 'பெத்லகேம்' பெண்கள் பள்ளியில், பிளஸ் ௧ வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில்,''நீலகிரியில், 2020-21ம் கல்வியாண்டில், பிளஸ் ௧ படிக்கும் பள்ளி

ஊட்டி:'மாணவர்கள் அரசு வழங்கும் திட்டங்களை எதிர்கால மூலதனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி 'பெத்லகேம்' பெண்கள் பள்ளியில், பிளஸ் ௧ வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில்,''நீலகிரியில், 2020-21ம் கல்வியாண்டில், பிளஸ் ௧ படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள், 4,721 பேருக்கு, 1.86 கோடி ரூபாயில், அரசின் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. அரசு, மாணவர்களின் நலன் கருதி நிறைய திட்டங்களை வழங்கி வருகிறது, 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டால், பல அரசு பள்ளி மாணவர்களின் கனவு நனவாகியுள்ளது. அரசால் மாணவர்களுக்கு வழங்கி வரும் திட்டங்கள், எதிர்காலத்தில் சிறந்த சமுதாயம் உருவாக்க மூலதனமாகும். இதன் பயனை பெற்று சமுதாயத்திற்கும், நாட்டுக்கும் நல்லது செய்ய வேண்டும்,'' என்றார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வினோத் ஆசிரியர், ஆசிரியைகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X