வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையத்தில், ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி பெருவிழா நடந்தது.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து கணபதி, நவக்கிரஹ, நட்சத்திர, தன்வந்திரி, சுதர்சன, சனி பரிகார, மூலமந்திர ஆகிய ஹோமம் நடத்தப்பட்டு, பூர்ணாகுதி சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.தொடர்ந்து, தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மாலை, 5:00 மணிக்கு, உற்சவர் புறப்பாடு நடந்தது. விழாவில், கரூர், வெள்ளகோவில், திருப்பூர், காங்கயம் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பெற்று வாயு மைந்தனை வழிபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE