பொது செய்தி

தமிழ்நாடு

மொழிப்போர் நினைவுத்துாண் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், மொழிப்போர் நினைவுத்துாண் அமைக்க வேண்டும், என, நேற்று மனு கொடுக்கப்பட்டது.பொள்ளாச்சி மொழிப்போர் ஈகியர் நினைவு கூட்டமைப்பினர், கோரிக்கைகளை வலியுறுத்தி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தியதையடுத்து, கலைந்து சென்றனர்.அந்த அமைப்பினர் கொடுத்த
 மொழிப்போர் நினைவுத்துாண் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், மொழிப்போர் நினைவுத்துாண் அமைக்க வேண்டும், என, நேற்று மனு கொடுக்கப்பட்டது.பொள்ளாச்சி மொழிப்போர் ஈகியர் நினைவு கூட்டமைப்பினர், கோரிக்கைகளை வலியுறுத்தி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தியதையடுத்து, கலைந்து சென்றனர்.அந்த அமைப்பினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சியில், 100க்கும் மேற்பட்டவர்கள், மொழிப்போராட்டத்தில் பங்கேற்று துப்பாக்கி சூட்டில் இறந்தனர். பொள்ளாச்சி மண்ணுக்கும், தமிழ்மொழிக்கும் வரலாற்று சிறப்பு செய்த நுாற்றுக்கணக்கானோரை நினைவு செய்ய எந்த அடையாளமும் இல்லை.பொள்ளாச்சி துப்பாக்கி சூடு, காந்தி சிலையில் இருந்து தேர்நிலையம், தபால் நிலையம், கோட்டாட்சியர் அலுவலகம் அருகே என, தாலுகா அலுவலகத்தை சுற்றியே நடந்தது. எனவே, தாலுகா அலுவலக வளாகத்தில் மொழிப்போர் ஈகியருக்கு நினைவுத்துாணுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துமீறல்தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், கோவை மாவட்ட தலைவர் பட்டீஸ்வரன் கொடுத்த மனு:ஆனைமலை பழைய ஆயக்கட்டு காரப்பட்டி கால்வாயில் இருந்து, அரசாணைப்படி, 3 இன்ச் பைப் போட அனுமதி பெற்று, தற்போது ஆளுங்கட்சியை சேர்ந்த தனிநபர் ஒருவர், 8 இன்ச் குழாய் அமைத்து, 15. கி.மீ.,க்கு தண்ணீர் எடுத்துச் செல்கிறார். இதனால், சுற்றுப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவர். இப்பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X