திருப்பூர்,:திருப்பூர் தெற்கு ஒன்றியம் என்ற பிரதிநிதித்துவத்தை பறித்துவிட்டதாக, அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டத்தில் அதிருப்தி எழுந்துள்ளது.திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள, 10 ஊராட்சிகள், மாநகராட்சியின் வடக்கே அமைந்துள்ளன. மீதியுள்ள, மூன்று ஊராட்சிகள், தெற்கில் அமைந்துள்ளன. அ.தி.மு.க.,வில், ஒரே ஒன்றியமாக இருந்தது; நிர்வாக வசதிக்காக, திருப்பூர் தெற்கு, வடக்கு ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.புறநகர் மாவட்டத்தை மேற்கு, கிழக்கு என்று பிரித்த போது, திருப்பூர் தெற்கு ஒன்றியத்தின் பிரதிநிதித்துவம் பறிபோயுள்ளதாக அதிருப்தி பரவியுள்ளது. மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஊராட்சிகளை, பல்லடம் மேற்கு ஒன்றியத்துடன் இணைந்துள்ளது, கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க., வினர் கூறியதாவது:பல்லடம் தொகுதியில் உள்ள, மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஊராட்சிகளுக்கு, உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. மூன்று ஊராட்சிகளில், 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.மற்ற கட்சிகள், தெற்கு ஒன்றிய கட்டமைப்பு உருவாக்கியுள்ள நிலையில், அ.தி.மு.க.,வில், மீண்டும் தெற்கு ஒன்றியத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE