பொள்ளாச்சி:பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.மார்கழி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று, அனுமன் ஜெயந்தி விழா கோவில்களில் விமரிசையாக நடக்கிறது. பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை, 108 வடை மாலை சாற்றப்பட்டது. ஆஞ்சநேயர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். டி.கோட்டாம்பட்டி ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில், இரட்டை ஆஞ்சநேயரான ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் வெண்ணை காப்பு அலங்காரத்திலும், ராமபக்த ஆஞ்சநேயர் பச்சை நிற ஆடையில் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.அன்சாரி வீதி ஸ்ரீ சிவராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில், அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. காட்டம்பட்டிபுதுாரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள் கோவிலில், ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அனுமனுக்கு துளசிமாலை, வடைமாலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.மெட்டுவாவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு, வடை மாலை, துளசி மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை, வடை, துளசி, எலுமிச்சை மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. அர்த்தநாரிபாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகு திருமலைராயப்பெருமாள் கோவில், கோட்டூர் கரிவரதராஜப் பெருமாள் கோவில்களில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. சோலையாறு முதல் பிரிவு மாரியம்மன் கோவில், ராமர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. அண்ணாநகர் ஸ்ரீராமர் கோவிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.உடுமலைஉடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. குட்டைத்திடல் ஆதிசக்தி விநாயகர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு செந்துாரமிட்டு, சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடந்தது.பிரசன்ன விநாயகர் கோவிலில், சிறப்பு அபிேஷகத்துடன், வடை, வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு நடந்தது. பாலப்பம்பட்டி, கரியபெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.காலை, 7:00 மணிக்கு யாகசாலை வேள்வி பூஜை, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தசதரிசன அலங்காரத்துடன், ஆஞ்சநேய சுவாமிகள் அருள்பாலித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE