உடுமலை:பள்ளிகளில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதிசெய்யும் வகையில், பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.தமிழகத்தில் வரும், 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை குழு சார்பிலும் அறிக்கை தயாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை குழுவினர் பள்ளிகள் தோறும், மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உள்ளனவா, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.பொங்கல் விடுமுறைக்குப்பின், பள்ளிகளில் தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. எனவே, அனைத்து பள்ளிகளிலும் துாய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE