பொது செய்தி

தமிழ்நாடு

நடுநிசியும் நெருக்கடியும் நெடுநேரம் நீடிக்காது! குருமகான் பரஞ்ஜோதியார் பேச்சு

Added : ஜன 13, 2021
Share
Advertisement
உடுமலை:'நடுநிசியும் நெருக்கடியும் நெடுநேரம் நீடித்ததில்லை. நிலைமை மாறும்; நம்பிக்கை வையுங்கள்,' என குருமகான் பரஞ்ஜோதியார் பேசினார்.உடுமலை திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தில், 31வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நிறைவு விழா நடந்தது. சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் விநாயகம் தலைமை வகித்தார். அறக்கட்டளை பொதுச்செயலர் சுந்தரராமன் வரவேற்றார்.குருமகான் பரஞ்ஜோதியார்
 நடுநிசியும் நெருக்கடியும் நெடுநேரம் நீடிக்காது! குருமகான் பரஞ்ஜோதியார் பேச்சு

உடுமலை:'நடுநிசியும் நெருக்கடியும் நெடுநேரம் நீடித்ததில்லை. நிலைமை மாறும்; நம்பிக்கை வையுங்கள்,' என குருமகான் பரஞ்ஜோதியார் பேசினார்.உடுமலை திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தில், 31வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நிறைவு விழா நடந்தது. சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் விநாயகம் தலைமை வகித்தார். அறக்கட்டளை பொதுச்செயலர் சுந்தரராமன் வரவேற்றார்.குருமகான் பரஞ்ஜோதியார் பேசியதாவது: தமிழகத்தில் அறம் சார்ந்த ஆட்சி, ஆன்மிக அரசாட்சி அமையும். உண்மையான, நேர்மையான, அன்பான, பேதமற்ற பிரிவு பார்க்காத நிலையே ஆன்மிக வழியாகும்.விவசாயிகள் பஞ்சபூதங்களை நன்கு அறிந்தவர்கள்; மண்ணை வளமாக்கி, மண்ணுக்கு உயிர் சேர்க்கும் வல்லமை மிக்கவர்கள். அவர்கள் நலமாக இருந்தால் உலக உயிர்கள் அனைத்தும் நலம் பெறும்.விவசாயிகளே இனி முக்கியத்துவம் பெறுவர். உலகில் பிரசித்தி பெற்றவர், பெரும் பணக்காரர் என்றால் அவர் விவசாயி ஆகத்தான் இருப்பார் என்ற நிலைமை உருவாகும்.கடவுளைப் பற்றி வீண்வாதம் செய்ய வேண்டியதில்லை. எண்ணத்தில், செயலில், சொல்லில், கடவுள் உங்களோடு இருக்கிறார். இன்று தத்துவத்தை விட்டு விட்டு, சம்பிரதாயங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் பிரபஞ்ச தத்துவம், குரு தத்துவம் மலர வேண்டும். மகிமை வாய்ந்த குருவை சிந்தித்தால், எல்லா ஆனந்தங்களையும் பெறலாம்.நடுநிசியும் நெருக்கடியும் நெடுநேரம் நீடித்ததில்லை. நிலைமை மாறும். நம்பிக்கை வையுங்கள். பிரபஞ்சத்தைக் காக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. நிலத்தில், நீரில், காற்றில், மனித அறிவிலும் மாசு ஏற்பட்டிருக்கிறது. இவை களையப்பட வேண்டும். இவ்வாறு, பேசினார்.தவ வேள்வி துவக்க விழா, 'டிவிடி'யை விநாயகம் வெளியிட புதுச்சேரி ஆச்சார்யா கல்வி நிலையத் தலைவர் அரவிந்தன் பெற்றுக்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X