பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் சுவாமி விவேகானந்தரின், 158வது பிறந்த தினத்தை ஒட்டி, தேசிய இளைஞர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. வித்யாலயா வளாகத்தில் உள்ள விவேகானந்தா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் சிலைக்கு ஆரத்தி பூஜை நடந்தது. வித்யாலய சுவாமிகள்,வித்யாலயத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் விவேகானந்தர் சிலை முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.நிகழ்ச்சிக்கு, வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். தொடர்ந்து, அனைத்து நிகழ்ச்சிகளும் வைரஸ் தொற்று காரணமாக, 'ஆன்லைன்' வாயிலாக நடந்தது.விழாவில், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். இந்நிகழ்ச்சிக்கு, புதுடில்லி ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த சுவாமி நித்யதிபானந்தா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, ஆன்லைன் வாயிலாக சிறப்புரையாற்றினார்.சூலூர்: சூலூர் நகர பா.ஜ., சார்பில், சுவாமி விவேகானந்தரின்,158வது ஜெயந்தி விழா,தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது. நகர தலைவர் அசோக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணி, தொழில்துறை பிரிவு செயலாளர் ரவி முன்னிலை வகித்தனர். சுவாமிஜி படத்துக்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி பேசுகையில்," நமது நாடு உலகின் குருவாக உயர்ந்திட, சுவாமி விவேகானந்தர் ஆற்றிய பணிகள் அளப்பரியது. இளைய சமுதாயத்தினரிடம் மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். அவர் காட்டிய வழியில் நடக்க நாமும் உறுதி ஏற்க வேண்டும்," என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE