பொது செய்தி

தமிழ்நாடு

அனுமன் ஜெயந்தி விழா கோவில்களில் கோலாகலம்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வட்டாரங்களில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.துடியலுாரில் உள்ள குபேர ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜையுடன் அனுமன் ஜெயந்தி விழா துவங்கியது. அனுமன், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பக்தர்கள் அனுமனை வழிபட்டனர்.
 அனுமன் ஜெயந்தி விழா கோவில்களில் கோலாகலம்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வட்டாரங்களில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.துடியலுாரில் உள்ள குபேர ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜையுடன் அனுமன் ஜெயந்தி விழா துவங்கியது. அனுமன், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பக்தர்கள் அனுமனை வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. இதேபோல, தொப்பம்பட்டி அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பாளையம் நவாம்சஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல, பாலமலை அரங்கநாதர் கோவில், பெரியநாயக்கன்பாளையம், திருமலை நாயக்கன் பாளையம், நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில்களில் உள்ள அனுமன் சன்னிதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.மருதுார் அனுமந்தராய சுவாமி கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காரமடையை அடுத்த மருதூரில் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று காலை சுவாமிக்கு திருமஞ்சனமும், அதைத்தொடர்ந்து அலங்கார பூஜைகளும் நடந்தன.ஆஞ்சநேயர், வெண்ணைக்காப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X