பொது செய்தி

தமிழ்நாடு

துரித மைதா உணவை தவிர்த்தால் உடல் நலத்தை சிறப்பாக பேணலாம்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
சூலூர்:துரித உணவு மற்றும்,மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை தவிர்ப்பதோடு,பசி எடுக்கும்போது மட்டும் தேவையான அளவு உட்கொள்வதன் வாயிலாக உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கும்.சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை ஒட்டி, சிறுவர் ,சிறுமியருக்கான பண்பு பயிற்சி முகாம் முத்துக்கவுண்டன்புதூரில் நடந்தது.சேவா பாரதி மற்றும் முத்துக் கவுண்டன்புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி
 துரித மைதா உணவை தவிர்த்தால் உடல் நலத்தை சிறப்பாக பேணலாம்

சூலூர்:துரித உணவு மற்றும்,மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை தவிர்ப்பதோடு,பசி எடுக்கும்போது மட்டும் தேவையான அளவு உட்கொள்வதன் வாயிலாக உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கும்.சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை ஒட்டி, சிறுவர் ,சிறுமியருக்கான பண்பு பயிற்சி முகாம் முத்துக்கவுண்டன்புதூரில் நடந்தது.சேவா பாரதி மற்றும் முத்துக் கவுண்டன்புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் நடந்தது.உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது குறித்து இயற்கை மருத்துவர் சுப்பிரமணியம் பேசியதாவது:உடல் நலத்தை சீராக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும். உடல் நன்றாக இருந்தால், மனது நன்றாக இருக்கும். இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால், வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.முதலில் உடலில் கழிவுகளை தேக்கி வைக்க கூடாது. ஜீரண சக்தியை தரும் பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் உடலும், யோகாசனங்கள் செய்தால், மனதும் உறுதியையும். உடலுக்கு தேவையான, காற்று, நீர், வெப்பம் ஆகியவை சரிவிகிதத்தில் இருக்க வேண்டும்.துரித உணவு, மைதாவில் தயாரிக்கும் உணவு பொருட்களை தவிர்த்து விடுங்கள். சிறுதானியங்களை அதிக அளவில் சாப்பிடுங்கள். பசி எடுத்தால் மட்டும் தேவையான அளவு சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்கும். இவ்வாறு, அவர் பேசினார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X