பொது செய்தி

தமிழ்நாடு

காட்டு யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

Added : ஜன 13, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.அவற்றை கட்டுப்படுத்தும் பணியில், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.அவற்றை கட்டுப்படுத்தும் பணியில், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக, நாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிகளில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவனூர், ராயர் ஊத்துப்பதி, தேவையம்பாளையம், நாயக்கன்பாளையம் கிராமங்களில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. இங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்த யானைகள், தென்னங்கன்று, வாழை உள்ளிட்டவைகளை நாசம் செய்கின்றன.வனத்துறையினர் விரட்டும் யானைகள், இரவு நேரத்தில் மீண்டும் மலையோர கிராமங்களை நோக்கி வந்து விடுகின்றன. சாமிசெட்டிபாளையம், காமராஜ் நகரில் உள்ள ஒரு தோட்டத்துக்குள் புகுந்த யானைகள், அங்கிருந்த தென்னங்கன்றுகளை அழித்தன. அவற்றை வேட்டை தடுப்பு காவலர்கள், பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அஜந்தா நகர் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் நுழைந்தன. அவற்றை வனத்துறையினர் உதவியுடன் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டுக்குள் விரட்டினர். இரவு நேரத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மக்கள், எச்சரிக்கையுடன் இருக்கும்படி, வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X