பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,விவசாய அணி சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா

Added : ஜன 13, 2021
Share
Advertisement
சூலூர்:-பா.ஜ., விவசாய அணி சார்பில், அரசூரில் வரும், 16 ல்நம்ம ஊரு பொங்கல் விழா நடக்கிறது.பா.ஜ., விவசாய அணி சார்பில், சூலூரை அடுத்த அரசூரில்'நம்ம ஊரு பொங்கல் விழா' வரும், 16 ல் நடக்கிறது. தமிழகத்தின் பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.ஆண்கள், பெண்களுக்கான பாரம்பரிய

சூலூர்:-பா.ஜ., விவசாய அணி சார்பில், அரசூரில் வரும், 16 ல்நம்ம ஊரு பொங்கல் விழா நடக்கிறது.பா.ஜ., விவசாய அணி சார்பில், சூலூரை அடுத்த அரசூரில்'நம்ம ஊரு பொங்கல் விழா' வரும், 16 ல் நடக்கிறது. தமிழகத்தின் பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.ஆண்கள், பெண்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், நாட்டு மாடுகளை பாதுகாப்பது குறித்து நிகழ்ச்சிகள் உள்ளன. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. நாள் முழுக்க நிகழ்ச்சிகள் நடைபெறும்.விழாவில், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி ஆசியுரை வழங்குகிறார். பா.ஜ., மாநில தலைவர் முருகன், கேரள மாநில பொறுப்பாளர் ராதா கிருஷ்ணன், மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் சேகர், துணைத்தலைவர் அண்ணாமலை, மாவட்ட பார்வையாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக,பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X