மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் உள்ள காய்கறி மண்டி, கலாசு தொழிலாளர்களுக்கு, கூலி உயர்த்தப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில், நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி மண்டிகள் உள்ளன. இங்கு நீலகிரியிலிருந்தும், கர்நாடகத்திலிருந்தும் வரும் காய்கறிகள், ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. இம்மண்டிகளில் காய்கறி மூட்டைகளை இறக்கி, ஏற்றும் பணிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலாசு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் சுமைக்கூலி உயர்வு வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து மேட்டுப்பாளையம் வெஜிடபிள் சேம்பர் ஆப் காமர்ஸ், நிர்வாக சபை கூட்டம், தலைவர் வைத்தியலிங்கம் தலைமையில் நடந்தது. காய்கறி மூட்டைகளை இறக்கவும், எடை போடவும், தனித்தனியாக ஒரு மூட்டைக்கு, 10 லிருந்து, 12 ரூபாயாகவும், கோஸ் ஒரு டன்னுக்கு இறக்கு கூலி,100 லிருந்து, 120 ரூபாயாகவும், எடைபோட, 105 லிருந்து, 126 ரூபாயாகவும், சேனைக்கிழங்கு ஒரு டன் இறக்கவும், எடை போடவும் தனித்தனியாக, 145 லிருந்து, 174 ரூபாயாகவும், கடை மூட்டை ஒன்றுக்கு,17 லிருந்து, 20.50 ரூபாயாக கூலி உயர்த்தப்பட்டுள்ளது.இக்கூலி உயர்வானது, மூன்று ஆண்டுக்கு நடைமுறையில் இருக்கும். மேலும் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, 20 சதவீதம் கூலி உயர்த்தி கொடுக்க, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வரும், 15-ஆம் தேதியிலிருந்து நடைமுறை படுத்த முடிவு செய்யப்பட்டது. சங்க துணை செயலாளர் முகமது நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE