கோவில்பாளையம்:மாடித்தோட்டத்தில், சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.தோட்டக்கலை துறை சார்பில், நகர்ப்புற வீடுகளில், காய்கறி, பழம் மற்றும் பூ வகைகள் வளர்க்க, மாடித்தோட்ட தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது. ஒரு தொகுப்புக்கு, அரசு மானியம், 340 ரூபாய் போக, 510 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். தற்போது, மாடித்தோட்டம் அமைத்து இருப்போருக்கு, சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.இதற்கு, 400 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மீதம், 720 ரூபாய் மட்டும் செலுத்தி சொட்டுநீர் பாசன தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.இதன்மூலம் மாடித்தோட்டத்தில், குறைவான நீரை மட்டும் பயன்படுத்தி, விளைச்சல் பெறலாம். சொட்டு நீர் பாசனம் அமைக்க, ஆதார் நகல், ஒரு போட்டோவுடன், கோவில்பாளையம், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விவரங்களுக்கு, 90926 21316, 95248 23302, 63831 06937 என்னும் மொபைல் எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம், என, எஸ்.எஸ்.குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிஷா பேகம் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE