பொது செய்தி

இந்தியா

இது உங்கள் இடம்: காங்கிரஸ் அழியக் கூடாது!

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (99)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :சொ.முத்துகுமரன், சிதம்பரம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காங்கிரசை, வாழ்ந்து கெட்ட கட்சி என்று சொல்லலாம். ஒரு காலத்தில், காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலமே இல்லை. 'இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா' என கோஷமிட்ட காலமும் ஒன்று உண்டு.தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆளும் கட்சியாக
congress, Tamil Nadu, Ithu Ungal Idam


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :


சொ.முத்துகுமரன், சிதம்பரம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காங்கிரசை, வாழ்ந்து கெட்ட கட்சி என்று சொல்லலாம். ஒரு காலத்தில், காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலமே இல்லை. 'இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா' என கோஷமிட்ட காலமும் ஒன்று உண்டு.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், திராவிட அரசியலால், எதிர்க்கட்சியாக மாறியது. எம்.ஜி.ஆர்., ஆட்சியின் போது, காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியாக பின்தள்ளப்பட்டது.அதை தொடர்ந்து, அ.தி.மு.க., - தி.மு.க., என, ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைத்தே, அக்கட்சி காணமல் போய் விட்டது. இன்றைய நிலையில், தனித்துப் போட்டியிட்டால், பெரும்பாலான தொகுதிகளில், 'டிபாசிட்' கூட, அக்கட்சி பெற முடியாது.


latest tamil news


தமிழகத்தில் மட்டும் அல்ல, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் பரிதாப நிலையில் தான் உள்ளது. வடமாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தபோது கூட, தென்மாநிலங்களில் அக்கட்சி அபார வெற்றி பெற்றது. இன்று, பல மாநிலங்களில் காங்கிரசின் நிலை பரிதாபமாக உள்ளது.மாநில கட்சிகள், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விரும்பிய காலம் உண்டு. இன்று, மாநில கட்சியிடம் கூட்டணிக்காக கெஞ்சும் நிலையில் காங்கிரஸ் உள்ளது.

காங்கிரசின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உண்டு. காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த ஊழல்கள், பிரதமரையே அடிமை போல நடத்தியது, கூட்டணி கட்சிகளுக்கு பயந்து, பதவிகளை வாரி வழங்கியது போன்றவை, மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.மேலும் வாரிசு அரசியல், மத சார்பற்றக் கட்சி என்ற போர்வையில் போலித்தனம் போன்றவையும், காங்கிரசின் தோல்விக்கு முக்கிய காரணம்.

காங்கிரஸ், சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலம், இது. மேலே கூறிய குற்றச்சாட்டுகளை, காங்கிரஸ் சரி செய்ய வேண்டும்.நேரு குடும்பம் தான், காங்கிரஸ் என்ற மனநிலையில் இருந்து, அக்கட்சி மாற வேண்டும். இந்தியர் யார் வேண்டுமானாலும், காங்கிரஸ் தலைவராகலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். நாட்டின் நலனுக்கு, காங்கிரஸ் அவசியம். எவ்வளவு குறைகள் இருந்தாலும், பா.ஜ.,வுக்கு மாற்றாக தேசிய அளவில் இருப்பது, காங்கிரஸ் தான். அக்கட்சி தோல்வி அடையலாம்; ஆனால், அழிந்து விடக் கூடாது.

Advertisement




வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
14-ஜன-202102:04:47 IST Report Abuse
SaiBaba ஏன் எதிர்க்கட்சி இல்லை? கெஜ்ரிவால் வருகிறார். ஒவைசி வருகிறார். சொல்ல முடியாது. ரஜினி கூட வருவார். இப்படி யோசித்துப்பாருங்கள். அமித்ஷா வந்த போது அதிமுக கூட்டணித் தாக்கல் வந்தது. கூட்டணி முடிவாகி விட்டது, என்ற துணிவில் கட்சி அறிவிப்பை வெளியிட்டார். பாஜக அதிமுகவிடம் முடிவு சொல்லாமல் இழுத்தடித்தது. நான் வர மாட்டேன் என்று கதவை இழுத்து சாத்தி இருக்கிறார். இப்போது கூட்டணி ஏற்பாடுகள் மளமளவென்று நடக்கின்றன. பிப்ரவரியில் வருவார்.
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
14-ஜன-202102:00:47 IST Report Abuse
SaiBaba காங்கிரஸில் எல்லோரும் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். பின் யாருக்காக அந்தக்கட்சி காக்கப்பட வேண்டும்? காந்தி காங்கிரஸைக் கலைக்கச்சொன்னார். அது இப்போது தானாக நடக்கிறது.
Rate this:
Cancel
V Gopal - Chennai,இந்தியா
14-ஜன-202101:06:16 IST Report Abuse
V Gopal தேசிய கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கண்டிப்பாக தேவை ஆனால் அவர்கள் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். தேச விரோத கும்பல்களுக்கு ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும். திமுக போன்ற தேசவிரோத கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X