ராமநாதபுரம் : ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன்கூறியதாவது: நெற்பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் மழை, காற்றில்ஈரப்பதம், குறைந்த வெப்பநிலை போன்ற காரணங்களால் லெட்சுமிநோய் அல்லது ஊதுபத்திநோய், நெற்பழநோய்என அழைக்கப்படும் பூஞ்சான வகையான நோய்தென்படுகிறது.
இந்த நோய் ஈரப்பதத்தில் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. தாக்கப்பட்டபூக்களில் முதலில் பூஞ்சான துகள்கள், சிறு பந்துகள் போல் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்பெரிதாகி, வெடித்து காற்றில் பரவிமற்ற செடிகளுக்கும் பரவும். இவற்றை கட்டுப்படுத்தவரப்புகள், பாசன கால்வாய்கள் ஆகியவற்றை களைகள் இல்லாமல்சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தழைச்சத்து அதிகம் இடக்கூடாது.
பயிரில் கதிர் வெளிவரும் பருவத்தில் காப்பர் ெஹட்ராக்சைடு 77 டபுள்யூ பிஏக்கருக்கு 500 கிராம் அல்லது புரோப்பிகோனோடுேஸால் ஏக்கருக்கு 200மி.லி., ஏதேனும் ஒன்றினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அருகேயுள்ள வேளாண்அலுவலர், அலுவலகத்தை தொடர்புள்ள கொள்ளலாம்,' இவ்வாறு அவர்கூறியுள்ளார்.---
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE