திருவாடானை : இலவச சைக்கிள்கள் மழை நீரில் நனைவதால்துருப்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாடானை பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கபடவுள்ளன.இதற்காக பாகங்கள் மொத்தமாக கொண்டு வரப்பட்டுதிருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில்உள்ள தனியார் பள்ளியில் இணைக்கும் பணியில் தொழிலாளர்கள்ஈடுபட்டுள்ளனர்.இங்கிருந்து திருவாடானை, பாண்டுகுடி,தொண்டி, மங்களக்குடி, எஸ்.பி.பட்டினம், உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சில தனியார் பள்ளிகளுக்கும் சைக்கிள்கள் அனுப்பி வைக்கபடும்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் இப் பள்ளியைசுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.அந்த இடங்களில்சைக்கிள்கள் பல நாட்களாகநிறுத்தபட்டுள்ளதால் துருப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE