தமிழ்நாடு

தொடர் மழை காரணமாக தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்கள்!

Added : ஜன 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்யும் தொடர் மழை காரணமாக நெல்,மிளகாய், பருத்தி உட்பட 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக 1.20 லட்சம் எக்டேரில்நெல்சாகுபடி நடக்கிறது. இதேப்போல 19 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் சாகுபடி நடக்கிறது.ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையை நம்பி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்யும் தொடர் மழை காரணமாக நெல்,மிளகாய், பருத்தி உட்பட 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக 1.20 லட்சம் எக்டேரில்நெல்சாகுபடி நடக்கிறது. இதேப்போல 19 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் சாகுபடி நடக்கிறது.ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையை நம்பி அக்டோபருக்குமுன்னதாகவே வயலை தயார் செய்து நெல் விதைக்கின்றனர். 2020அக்டோபரில் குறிப்பிடும் படியாக மழை பெய்யவில்லை,இதனால் நெல்விதைகள் முளைக்காமல் நிலத்தை மறுஉழவு செய்து விவசாயிகள் பலர்இரண்டாவது முறையாக நெல் விதைத்துள்ளனர்.

நவம்பர், டிசம்பர் மழையால் தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து பூவெடுத்தும்,சில இடங்களில் நெல்மணிகள் வளர்ந்தும் உள்ளன. இதேப்போல பருத்தி,மிளகாய்,எள்,கொத்தமல்லி உள்ளிட்டவைகளை விவசாயிகள் பலர் சாகுபடிசெய்துள்ளனர்.கடந்த ஒருவாரமாக தொடர்ந்துமழை பெய்கிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக விட்டு,விட்டு கனமழை பெய்கிறது.

இதன் காரணமாக ராமநாதபுரம், நயினார்கோயில், சிக்கல், முதுகுளத்துார், கடலாடி, பரமக்குடி உள்ளிட்ட பகுதி வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக நெற்பயிர்கள் அழுகி நெல்மணிகள் கருத்து விட்டது. மிளகாய்செடிகளும் அழிந்து விட்டது. 10 ஆயிரம் ஏக்கர் வரை பயிர்கள்தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது, ரூ. பலஆயிரம் இழப்புஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாகபாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பயிர் சேத மதிப்பை கணக்கிடஉத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X