=ராமநாதபுரம் : பொங்கலை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மேலுார் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து கரும்பு விற்பனைக்கு வந்துள்ளது. இவ்வாண்டு விலை உயர்வு, மழையால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையில் சர்க்கரை பொங்கலுக்கு அடுத்தப்படியாக கரும்பு முக்கியத்துவம் பெறுகிறது. ராமநாதபுரம் பகுதியில் கரும்பு சாகுபடி இல்லாத காரணத்தினால் மதுரை, மேலுார் பகுதியில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வருகின்றனர். அரண்மனைபகுதி, பஸ் ஸ்டாண்ட், ராமேஸ்வரம் ரோடு உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரும்பு விற்கப்படுகிறது. மழை, வரத்துகுறைவால் கரும்பின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் ஒருகட்டுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை விலை உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் வியாபாரி சேகர் கூறுகையில்,‛ இவ்வாண்டு ரேஷனில் முழு கரும்பு வழங்குவதால் மேலுார் கரும்புக்கு கிராக்கி ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. இங்கு ஜோடி ரூ.80, கட்டு ரூ. 450 முதல் ரூ.500 என தரத்திற்கு ஏற்ப விற்கிறோம். கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு காலை முதல் இரவு வரை இடைவிடாது மழைபெய்வதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கரும்புகளை சர்க்கரை ஆலைக்கும் அனுப்ப முடியாது, இவ்வாண்டு ஏற்றுக்கூலி, இறக்குகூலி போக லாபம் இல்லை, முதலீட்டை எடுப்பதே சிரமம்,' என்றார். ------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE